
"குடிமகன்"
காவலர்க்கு காவல் வேண்டி
கவிழ்ந்து விட்டார் கைகூலிக்கு
ஊருக்கு ஒரு காவல் நிலயம்
இருந்தும் இங்கு பயன் இல்லை தாம்
லஞ்சத்திற்க்கு பஞ்சம் இல்லை
லாபத்திலே ஆளுக்கு பாதி
கல்லச்சாராயம், கஞ்சா, அபின்
கவலை இல்லா கைசரக்கே
நாள் தோரும் பொழுது போக்கு
நால்வரை கொல்வது தான்
பரந்த இந்த பாரதத்தில்
பார்போர் யாரும் இல்லை
நாதியற்ற நம் மவர்கோ
சாதி பற்றி பெருங்கவலை
குடிகுடியாய் கொழுத்திவிட்டு
கும்மாளம் அடித்துவிட்டு
பணம் தின்று பிணம் போல
போவது தான் இவன் நிலைமை.
https://youtu.be/PNrvzqek244
No comments:
Post a Comment